இது முழுக்க அரசியல் மட்டும்தான் - பி.டி.உஷா மீது வினேஷ் போகத் பகீர் குற்றச்சாட்டு!
தனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என பி.டி.உஷா மீது வினேஷ் போகத் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
வினேஷ் போகத்
பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 53 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்ட ஹரியானா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அதிக எடையுடன் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அக்டோபர் மாதம் 5ம் தேதி ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா திரும்பிய வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
முழுக்க அரசியல்
தொடர்ந்து, ஜூலானா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இறங்கி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் பேட்டியளித்துள்ள வினேஷ் போகத், பாரிஸீல் எனக்கு எந்தவகையிலான ஆதரவு கிடைத்தது என்று எனக்குத் தெரியவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது என்னைச் சந்திக்க வந்த பி.டி.உஷா எனது அனுமதியின்றி புகைப்படம் எடுத்துக் கொண்டார். சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து நான் உங்களுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்றுதான் ஒருவர் ஆதரவு தருவார்களா. இது முழுக்க முழுக்க அரசியல். முறையான நடவடிக்கை இல்லை. வெறும் நடிப்பு என்று தெரிவித்துள்ளார்.