இந்திய அணியில் வாய்ப்பில்லை - அணியின் உரிமையாளராக மாறிய சாம்சன்
கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சாம்சன் சேர்ந்துள்ளார்.
சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் அணியின் திறமை வாய்ந்த வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் சஞ்சு சாம்சன். 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.
அவருக்கு வாய்ப்பு எப்போதாவது தான் கிடைக்கும். அவர் கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு தேர்வு செய்யப்பட்ட இந்திய ஒரு நாள் அணியில் இடம்பெறவில்லை.
அணி உரிமையாளர்
இந்நிலையில், கேரளா சூப்பர் லீக் என்ற தொடரில் மலப்புரம் எப் சி என்ற கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சேர்ந்துள்ளார். கொச்சியில் இந்த தொடர் நடைபெற்றது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டை அடுத்து கால்பந்து மீது தான் அதிக காதல். ரிக்கெட் விளையாடாத காலத்தில் உள்ளூர் வீரர்களுடன் சஞ்சு சாம்சன் கால்பந்து போட்டிகளில் அதிகம் விளையாடுகிறார் என பலர் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.