இந்தியாவை ஐசிசி தொடரில் வீழ்த்துவோம்; ட்ரெய்லர் தான் இது - கேமரூன் க்ரீன் உறுதி!

Indian Cricket Team Australia Cricket Team
By Sumathi Sep 08, 2024 08:45 AM GMT
Report

இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா தயாராகி வருவதாக கேமரூன் க்ரீன் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடர் 

ஆஸ்திரேலிய மண்ணில் 21ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது.

இந்தியாவை ஐசிசி தொடரில் வீழ்த்துவோம்; ட்ரெய்லர் தான் இது - கேமரூன் க்ரீன் உறுதி! | Cameroon Green On Gavaskar Trophy Against India

தொடர்ந்து இம்முறை இந்தியாவை தோற்கடிப்போம் என்று ரிக்கி பாண்டிங் முதல் நேதன் லயன் வரை முன்னாள் இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வரலாற்றில் யாரும் செய்யாத ரெக்கார்டு - இங்கிலாந்து வீரரின் விசித்திர சாதனை!

வரலாற்றில் யாரும் செய்யாத ரெக்கார்டு - இங்கிலாந்து வீரரின் விசித்திர சாதனை!

கேமரூன் க்ரீன் நம்பிக்கை

அந்த வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் இதுகுறித்து பேசுகையில், “ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒருவருக்கொருவர் விளையாடும் போது நிறைய விஷயங்களில் தரமான போட்டி வெளியே வரும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக ஒவ்வொரு புள்ளியும் மிகவும் முக்கியமானது.

cameroon green

அதற்காக எதிரணியை வீழ்த்துவதற்கு தேவையான யோசனைகளை பெற முயற்சிப்போம். 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் கொஞ்சம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு முன்னோட்டமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதற்காக இந்தியாவிலிருந்து நாங்கள் பல தகவல்களை பெற முயற்சித்து வருகிறோம். அதை மீண்டும் எப்படி வெல்வது என்பதை பற்றி பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.