வரலாற்றில் யாரும் செய்யாத ரெக்கார்டு - இங்கிலாந்து வீரரின் விசித்திர சாதனை!
கேப்டன் ஆலி போப் டெஸ்ட் வரலாற்றிலேயே யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.
ஆலி போப்
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 44.1 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.
ஆலி போப் 103 ரன்னுடனும், ஹாரி புரூக் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் ஆலி போப் சதம் அடித்தார். இது அவரது ஏழாவது டெஸ்ட் சதம்.
விசித்திர சாதனை
ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் ஒரு சதம் என்ற அடிப்படையில் தனது முதல் ஏழு சதங்களையும் ஏழு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்து சாதனை செய்துள்ளார்.
இதற்கு முன் கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலி போப் அடித்த டெஸ்ட் சதங்கள்:
135 ரன் - தென் ஆப்பிரிக்கா - 2020
145 ரன் - நியூசிலாந்து - 2022
108 ரன் - பாகிஸ்தான் - 2022
205 ரன் - அயர்லாந்து - 2023
196 ரன் - இந்தியா - 2024
121 ரன் - வெஸ்ட் இண்டீஸ் - 2024
103 ரன் - இலங்கை - 2024