இந்திய பிளேயர்ஸ் தரமா வர இதுதான் காரணம் - டிராவிட் ஓபன்டாக்
இந்திய அணிக்கு கிடைக்கும் திறமையான வீரர்கள் குறித்து ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட்
டி20 உலக கோப்பையை, இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்,
நவீன கிரிக்கெட் மற்றும் தொழில்நுட்பத்தின் வரவால் சிறிய நகரங்களில் இருந்து திறமையான வீரர்கள் கிடைப்பதன் மூலமாக இந்தியாவில் தரமான மூன்று சர்வதேச அணிகளை உருவாக்க கூடிய அளவுக்கு திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.
இந்திய அணி
தற்போதைய சூழலில் இந்திய கிரிக்கெட்டை பார்த்தால் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், வலிமையானதாகவும் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் திறமை நாட்டின் எல்லா இடங்களில் இருந்தும் வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் ரஞ்சி டிராபியின் தரத்தை பாருங்கள்.
தென் மண்டலத்தில் முன்பு தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் அணிகளில் விளையாடுவதை தவிர மற்ற அணிகளை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அதை மரியாதை குறைவாக நான் சொல்லவில்லை. ஆனால் சவுத் ஜோனில் நீங்கள் தோற்கடிப்பதற்கு சவுரியமாக இருக்கும் அணி என்று எந்த அணியும் தற்போது தென் மண்டலத்தில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.