வரலாற்றில் யாரும் செய்யாத ரெக்கார்டு - இங்கிலாந்து வீரரின் விசித்திர சாதனை!

Cricket England Cricket Team
By Sumathi Sep 07, 2024 10:37 AM GMT
Report

கேப்டன் ஆலி போப் டெஸ்ட் வரலாற்றிலேயே யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.

ஆலி போப் 

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 44.1 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.

ollie pope

ஆலி போப் 103 ரன்னுடனும், ஹாரி புரூக் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் ஆலி போப் சதம் அடித்தார். இது அவரது ஏழாவது டெஸ்ட் சதம்.

புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட் - 16 ஆண்டுகால தவிப்பு நிறைவேறுமா?

புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட் - 16 ஆண்டுகால தவிப்பு நிறைவேறுமா?


விசித்திர சாதனை

ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் ஒரு சதம் என்ற அடிப்படையில் தனது முதல் ஏழு சதங்களையும் ஏழு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்து சாதனை செய்துள்ளார்.

வரலாற்றில் யாரும் செய்யாத ரெக்கார்டு - இங்கிலாந்து வீரரின் விசித்திர சாதனை! | Eng Vs Sl 3Rd Test Ollie Pope Hit Seven Centuries

இதற்கு முன் கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலி போப் அடித்த டெஸ்ட் சதங்கள்:

135 ரன் - தென் ஆப்பிரிக்கா - 2020

145 ரன் - நியூசிலாந்து - 2022

108 ரன் - பாகிஸ்தான் - 2022

205 ரன் - அயர்லாந்து -  2023

196 ரன் - இந்தியா - 2024

121 ரன் - வெஸ்ட் இண்டீஸ் - 2024

103 ரன் - இலங்கை - 2024