மாருதியில் என்ட்ரி கொடுக்கும் விநாயகர்,முருகன் - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

Tamil nadu Festival Vinayagar Chaturthi
By Vidhya Senthil Sep 03, 2024 12:28 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in திருவிழா
Report

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாசமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆனது வரும் செப்டம்பர் 7 சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மூன்று நாட்கள் வரையும், வட இந்தியாவில் பத்து நாட்கள் வரையிலும் இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

மாருதியில் என்ட்ரி கொடுக்கும் விநாயகர்,முருகன் - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! | Vinayagar Chaturthi Different Ganesha Idols

இந்த நிலையில் ஆங்காங்கே சிலைகள் நிறுவும் பணிகளும் களைகட்டியுள்ளது. சிறிதும் பெரியதுமாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இந்த விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

விநாயகர் சிலை ஊர்வலம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை

விநாயகர் சிலை ஊர்வலம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை

சிலைகள் 

அந்த வகையில் விநாயகர் எந்த மாதிரியான அவதாரங்களில் வரப்போகிறார் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், புல்லட் ஓட்டும் விநாயகர், கார் ஓட்டும் விநாயகர் , முருகன் பின்னால் அமர்ந்து விநாயகர் அமர்ந்து வருவது போன்ற சிலைகள் வடிவைக்கப்பட்டுள்ளது.

மாருதியில் என்ட்ரி கொடுக்கும் விநாயகர்,முருகன் - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! | Vinayagar Chaturthi Different Ganesha Idols

நாம் சாதாரணமாக மரத்தடியில் பார்த்த தொந்தி விநாயகர்  புதிய அவதாரம் எடுத்துப் போல் உள்ளது. மேலும் விநாயகர் முருகன் இருவரும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாடுவது போலவும்  சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.