பழனியில் நடந்தது விரோத மாநாடு; சனாதானத்தின் எதிரி உதயநிதி- ஹெச். ராஜா விமர்சனம்!
பழனியில் நடந்தது முருகன் மாநாடே இல்லை என்று ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.
ஹெச். ராஜா
இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மாவட்டம் மடத்து தெருவில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் ஹெச். ராஜா கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, "தமிழ்நாட்டில் இருக்கும் அரசு இந்து விரோத அரசாக இருக்கிறது. சமீபத்தில் பழனியில் முருகன் மாநாடு என்று ஒன்றை நடத்தினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சியிலேயே கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி அது ஆன்மிக மாநாடு இல்லை எனப் பேசியிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின்
அவர் சொன்னது சரிதான். அது ஆன்மீக மாநாடு இல்லை. இந்து விரோத மாநாடு தான். முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதை இந்துக்கள் நிச்சயம் ஏற்று மாட்டார்கள். சனாதன இந்து தர்மத்தின் எதிரி உதயநிதி ஸ்டாலின்.
இப்போது முதலீடுகளை ஈர்க்க எதோ முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அரசு பணத்தில் தமிழக முதல்வர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றது போலவே இருக்கிறது.
சமீபத்தில் கூட இப்படி தான் முதலீடு ஈர்க்க துபாய் செல்வதாகச் சொல்லிக் கொண்டு சென்றார். ஆனால், ஒரு பைசா கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.