சூரியின் ஊருக்கு போனேன்.. அவர் இப்படி பண்ணுவாருனு நினைக்கல - போட்டுடைத்த புகழ்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகர் சூரியின் ஊருக்கு சென்ற அனுபவங்கள் குறித்து நடிகர் புகழ் பேசியுள்ளார்.
நடிகர் புகழ்
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான புகழ், சினிமாவிலும் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருந்தார். இவர், 1947 என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது ‘Mr Zoo keeper’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் புகழ் அறிமுகமாகியுள்ளார். சுரேஷ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மிகுந்த மகிழ்ச்சி
இந்நிலையில், ‘Mr Zoo keeper’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரி குறித்து புகழ் பேசினார்.
அவர் பேசியதாவது "சூரி அண்ணனின் ஊர் திருவிழாவிற்கு சென்றபோது, அங்கு ‘எல்லாரும் ஒண்ணா நில்லுங்க, போட்டோ எடுக்கனும்’ என்று சொன்னபோது, என்னையும் அழைத்து புகைப்படம் எடுக்க நிற்க வைத்தார். என்னை அவரது குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி” என்று கூறினார்.