பவதாரிணி இறந்ததுக்கு அழுது புலம்பணுமா.. ஆடனும், பாடனும் - இளையராஜா மருமகள் பகீர்!
பவதாரிணி மறைவின்போது தான் வெளியிட்ட வீடியோ தொடர்பாக கமெண்ட் செய்தவர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை விலாசினி.
நடிகை விலாசினி
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். பவதாரிணியின் மறைவு அவரது குடும்பத்திலும், திரையுலகிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அப்போது இளையராஜாவின் மருமகளும் உறவினருமான சீரியல் நடிகை விலாசினி, தன்னுடைய சகோதரியை இனி பார்க்கவே முடியாது என்று கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, "எல்லோருக்கும் வணக்கம். இந்த வீடியோ யாருக்காக என்றால், நான் பவதாரிணி இறந்த சில மணி நேரத்தில் வீடியோ பதிவிட்டதும் சிலர் '"நீங்க நல்லா டிராமா குயின்.
அவசியம் இல்ல
எப்படி எல்லாம் அழுதுட்டு வீடியோ போட்டீங்க" என்று கமெண்ட் செய்தவர்களுக்காக தான். எங்கள் குடும்பத்தில் பவதாரணியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்புதான். அதுக்காக அழுது புலம்பி சோஷியல் மீடியாவில் வீடியோ போடணும் என்று அவசியம் இல்ல.
ஏன்னா அது எங்களோட குடும்ப பிரச்சனை. இன்னொரு விஷயம் நான் மீடியாவில் என்டர்டைன்மென்ட் பண்ற இடத்தில் இருக்கிறேன். ஆடனும், பாடனும் நடிக்கணும் ஷூட்டிங் இடத்துல யாரு இறந்துட்டாலும் அந்த பீலிங்க்ஸை ஒரு பக்கம் வச்சிட்டு இந்த சீன்ல நடிக்கணும். இதை புரிஞ்சிக்காதவங்க புரிஞ்சுக்கோங்க" என்று விலாசினி பேசியுள்ளார்.
You May Like This Video