கவுண்டமணி சினிமால பாக்குற மாதிரி இல்ல; அந்த படம் பாக்க சொல்லி.. - போட்டுடைத்த சுகன்யா!
நடிகர் கவுண்டமணி குறித்து நடிகை சுகன்யா பேசியுள்ளார்.
நடிகை சுகன்யா
90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லு புது நாத்து' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா.
தொடர்ந்து சின்ன கவுண்டர், செந்தமிழ் பாட்டு, தாலாட்டு, மகாநதி, இந்தியன், சேனாபதி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 'சின்ன கவுண்டர்' படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் சுகன்யா பெற்றார் .
பல பிலிம் பேர் விருதுகளும் இவரது நடிப்பிற்கு கிடைத்துள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பிற மொழிகளிலும் ஹிட் படங்களில் நடித்தார் சுகன்யா.
அபாரமான அறிவு
பின்னர் 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். சுகன்யா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் கவுண்டமணி குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது "எங்க அப்பா படத்துக்கு அவர்தான் ஹீரோ. அப்போ நான் அறிமுகம் தான் ஆகியிருந்தேன். என்கிட்ட வாம்மா..வாம்மா'னு நல்லா பழகுவாரு. நம்ம சினிமால பாக்குற மாதிரி அவர் இல்ல. அவருக்கு சினிமாவை பற்றி அப்படியொரு அபாரமான அறிவு.
நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பாரு. ஆங்கில நடிகைகள் பற்றி பேசுவாரு. இந்த படங்கள் பாரும்மா.. உனக்கு பயனுள்ளதா இருக்கும் என்று சொல்லுவாரு. எனக்கு அவர் கூட நடிக்க மிகவும் பிடிக்கும்" என்று பேசியுள்ளார்.
You May Like This Video