இப்படி வீர வசனம் பேசுறீங்க; முதல்வர் வீட்டுக்கு சென்று பம்முனது யாரு? சீமானை விளாசிய விஜயலட்சுமி!
விஜயலட்சுமி சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
விமர்சித்த சீமான்
விழுப்புரம், செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செஞ்சிக் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது சீமான் பேசிக் கொண்டிருந்த பொழுது செய்திகளைச் சேகரிப்பதற்காகச் செய்தியாளர்கள் வந்துள்ளனர். ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை மேடையிலிருந்து பார்த்த சீமான் ஆவேசமடைந்து கீழே இறங்கி வந்து வாக்குவாதம் ஏற்படும் இடத்திற்குச் செல்ல முற்பட்டார். ஆனால் அதற்குள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமானைத் தடுத்து நிறுத்தினர்.
பின் சலசலத்திற்கும் சட்டத்திற்கும் அஞ்சுகின்ற திராவிட நரிகள் நாங்கள் கிடையாது என விமர்சித்தார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விளாசிய விஜயலட்சுமி
அதில் சீமான் ஆவேசமாக கீழே இறங்கி ஒருத்தரை அடிச்சாரு.. பின்னர் மேடையில் ஏறி சலசலப்புக்கும் சத்தத்திற்கும் அஞ்சுகிற திராவிட நரிகள் இல்லை நாங்கள் என்று ஒரு வீர வசனத்தை பேசி இருந்தாரு.. சலசலப்பிற்கும் சத்தத்திற்கும் அஞ்சுகிற திராவிட நரிகள் நீங்கள் இல்லை என்றால்
வளசரவாக்கம் காவல் நிலையத்தில் என்னுடைய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்தார்கள். பயந்து ஓடிபோய் ஏன் சுப்ரீம் கோர்ட்டில் போய் தடை வாங்கினீர்கள்? நீங்கதான் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று பம்மிக்கொண்டு,
முதல்வர் எனது அண்ணன் தயாளு அம்மா என்னுடைய அம்மா என்று உறவு கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களே தவிர, அவர்கள் யாரும் உங்களுக்கு பயந்து அஞ்சி என்னுடைய தம்பி என்று உங்களிடம் யாரும் உறவு கொண்டாடலையே..
இந்த வீர வசனம் என்ன எனக்கு புரியவில்லை, பார்த்துக்கொண்டு இருக்கிறவர்கள் யாருக்காவது அந்த வீர வசனம் என்ன புரிஞ்சா எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா என தெரிவித்துள்ளார்.