எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? பாஜக தலைமை திட்டம்!
ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநராகும் எச்.ராஜா?
மஹாராஷ்டிரா ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால்,
விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாகாலாந்து ஆளுநராக பதவிவகித்த இல.கணேசன் சமீபத்தில் காலமானதால், மேலும் ஒரு ஆளுநர் பதவி காலியாக உள்ளது.
தலைமை திட்டம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அடுத்தடுத்து ஆளுநர் பதவியில் இல்லாமல் போகும் சூழலில், நியமிக்கப்படும் புதிய ஆளுநர்களில் ஒருவர் தமிழராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இரு மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவருக்கு ஆளுநர் பதவி அளிக்க ஆலோசனை நடப்பதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.