எந்த கட்சியுடன் கூட்டணி? வெளிப்படையாக பேசிய ராமதாஸ்!
ராமதாஸ் தேர்தல் கூட்டணி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தேர்தல் கூட்டணி
அன்புமணி ராமதாஸ் தரப்பு சார்பில் பாமக பொதுக்குழு கூட்டம் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. அப்போது அன்புமணி தான் பாமகவின் தலைவர் என அந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேறப்பட்டது.
இந்நிலையில், அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் தரப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் உள்ள சங்கமித்ரா அரங்கில் நடைபெற்றது.
இதில் ராமதாஸ் தான் பாமகவின் தலைவர் தான். கட்சியில் அவருக்கு தான் முழு அதிகாரம் உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ், ''எந்த கூட்டணிக்கு சென்றால் வெற்றி கிடைக்கும் என தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
ராமதாஸ் வெளிப்படை
நீங்கள் எனக்கு கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும், அவர்கள் விரும்பும் நல்ல கூட்டணி அமையும். நீங்கள் கொடுத்த அதிகாரத்தை சிறப்பாக பயன்படுத்துவேன். நான் காட்டும் வழியில் வாருங்கள்.
உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்'' என்று தெரிவித்தார். மேலும், ''அனைத்து சமூகத்தினருக்கும் சேர்த்து தான் சாதிவாவாரி கணக்கெடுப்பு கேட்டு போராடுகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என தமிழக அரசு தட்டிக்கழிக்கிறது.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் பேசினேன். முதல்வர் நினைத்தால் உடனடியாக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை உடனே வழங்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை போராடுவதை விடப்போவதில்லை.
இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்காக மாபெரும் போராட்டம் நடத்தப்படும். பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக ரசு நிறைவேற்றித் தர வேண்டும்'' எனவும் தெரிவித்துள்ளார்.