விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்?
விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை வாங்கியது யார் என்பது குறித்து பார்க்கலாம்.
ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி
2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். உடல்நிலை பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். தற்போது தேமுதிகவை அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வருகிறார்.
அவருக்கு உறுதுணையாக மகன் விஜய பிரபாகரன் செயல்பட்டு வருகிறார். சென்னையை அடுத்த மாமண்டூரில் விஜயகாந்த் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை உருவாக்கினார்.
ரூ.150 கோடிக்கு விற்பனை
விஜயகாந்தின் தாய் மற்றும் தந்தையின் பெயரில் தொடங்கப்பட்ட கல்லூரியில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என்று ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த கல்லூரியை பிரபல தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்திடம் விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. கல்லூரியை ரூ.150 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சுமார் 75 ஏக்கரில் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் 7 பிரிவுகளுக்கும், முதுகலைப் படிப்புகளில் 4 பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பலுசிஸ்தான் சுதந்திர நாடு...! பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம் - அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம் IBC Tamil
