விஜய்க்கு நான் சீனியர்; தவெகவுடன் கூட்டணி? விஜய பிரபாகரன் பளீச்
விஜய்யை விட நான் அரசியலில் சீனியர் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தவெகவுடன் கூட்டணி?
தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம்.
விரைவில் 234 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமினம் செய்ய உள்ளோம். தற்போது செயற்குழு, பொதுக்குழு நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தவெக தலைவர் விஜய் அண்ணா ஒன்றும் எதிரி கிடையாது.
அவரைப்பற்றி பேசியுள்ளேன். முதல் குரு பூஜைக்கு அழைக்கும்போது விஜய் அண்ணாவை பார்த்துள்ளேன். கோட் படத்துக்கு வரும்போது அவரை சந்தித்தேன். கூட்டணி தொடர்பாக எல்லாம் அவரை நான் சந்திக்கவில்லை. எனக்கு வயது 33. அண்ணனுக்கு வயது 50.
விஜய பிரபாகரன் தகவல்
அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் என்னை விட சீனியர். இருப்பினும் அரசியலில் நான் அவரை விட சீனியர் என்று அவரே ஒருமுறை கூறினார். அதை நான் பெருமையாக நினைக்கிறேன். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சினிமாவில் அவர் சீனியர்.
அங்கு அவரின் அனுபவம் பெரியது. இன்றைக்கு கட்சி தொடங்கி அவரின் பின்னால் பல லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். அது அவரின் பலம். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போதும், பல லட்சம் இளைஞர்கள் எங்கள் கட்சியிலும் இருந்தார்கள்.
இருவருமே நாட்டிற்கு நல்லது செய்வோம். விஜய் கட்சிக்கு உட்பட அனைத்து கட்சி தலைவர்களிடமும் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.