ராமதாஸ் - அன்புமணியின் குடும்ப SHOW அது; மாநாடு அல்ல - சாடிய காடுவெட்டி குருவின் மகள்
ராமதாஸ் - அன்புமணியின் குடும்ப SHOW தான் மாநாடு என காடுவெட்டி குருவின் மகள் தெரிவித்துள்ளார்.
பாமக மாநாடு
பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு காடுவெட்டி குரு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் உருவங்கள் வானில் காட்டப்பட்டது. இந்நிலையில் இந்த மாநாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ள காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை, மாநாடு நடத்தி அப்பா- மகன் சண்டை போடுவதால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது.
அப்பாவை சரிகட்ட கூட்டத்தை கூட்டி தன்னை நிரூபிக்க இந்த நாடகத்தை அன்புமணி நடத்தியுள்ளார். வன்னியர் சங்க மாநாட்டிற்கு நேற்று வந்த கூட்டமே எங்க அப்பாவுக்காக வந்த கூட்டம் தான். 2021ஆம் ஆண்டு 10.5% இடஒதுக்கீடு கிடைத்து விட்டதாக ராமதாஸ் - எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் நாடகம் ஆடி மக்களை ஏமாற்றியுள்ளார்.
காடுவெட்டி குரு மகள் கருத்து
காடுவெட்டி குரு அவர்கள் இருந்தவரை வன்னியர் அறக்கட்டளை கல்லூரியில் இலவச கல்வி கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின்னர் அது ராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றப்பட்டு, இலவச கல்வியும் நிறுத்தப்பட்டது. இவர்கள்தான் இலவச கல்வியைப் பற்றி வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
வன்னியர் அறக்கட்டளை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மாநாட்டில், கட்சியின் இளைஞரணி தலைவராக இருப்பவர் உரையாற்றவில்லை. இது வன்னிய சமுதாயத்துக்காக நடத்தப்பட்ட மாநாடு அல்ல,
தங்கள் குடும்பத்தை முன்னிறுத்துவதற்காகவே நடத்தப்பட்ட ஒரு SHOW. உயிர்நீத்த அந்த 27 தியாகிகளை அழைத்து முன்வரிசையில் அமரவைத்திருக்க வேண்டும். ஆனால், உங்கள் மருமகள், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.