யாரா இருந்தாலும் தூக்குவேன்.. மாநாட்டில் யாரை எச்சரித்தார் ராமதாஸ்?

Dr. S. Ramadoss PMK Chennai
By Sumathi May 12, 2025 11:28 AM GMT
Report

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டில் அக்கட்சியில் நிலவிய பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது அந்த மாநாடு.

பாமக மாநாடு

அதுமட்டுமில்லாமல் மோதல் இன்னும் அதிகமாகி விட்டதோ என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. 25 நிமிடங்கள் பேசிய மருத்துவர் ராமதாஸ், ஒரே ஒரு முறை மட்டும் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்.

ramadoss

அதுவும் பேச்சின் தொடக்கத்தில் எல்லாருக்கும் வணக்கம் சொல்லும் போது, மாநாட்டுக் குழுத்தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களே என்று குறிப்பிட்டதோடு சரி.

அதிலும் மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்ததற்காக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் பெயரை இரண்டு முறைக் குறிப்பிட்டு பாராட்டியவர் அன்புமணி பெயரை ஒரே ஒருமுறை மட்டுமே சொன்னார். அத்தோடு தனது பேச்சில் நிர்வாகிகளை விமர்சித்து அவர் பேசிய பேச்சு அன்புமணிக்கும் சேர்த்து தானோ என்ற கேள்வியை எழுப்பும் வகையில் இருந்தது.

பாஜக- பாமக இருந்தால்.. அங்கு இணையவே மாட்டோம் - ஒரே போடுபோட்ட திருமா

பாஜக- பாமக இருந்தால்.. அங்கு இணையவே மாட்டோம் - ஒரே போடுபோட்ட திருமா

ராமதாஸ் வார்னிங்

உங்களுடைய கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாராக இருந்தாலும் வேலை செய்யவில்லையென்றால் தூக்கி எறிந்து விடுவேன் என்றிருக்கிறார். அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் பதவிகளுக்காக பல இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

pmk conference

நீங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் உங்கள் பதவிகளை அவர்களுக்கு கொடுத்து விடுவேன் என்றிருக்கிறார் ராமதாஸ். ஏற்கனவே சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இது என்னுடைய கட்சி என்று சொன்ன வார்த்தைகளை மீண்டும் மாநாட்டில் பயன்படுத்தியிருக்கிறார்.

நீங்கள் திருந்துங்கள் அல்லது உங்களைத் திருத்துவதற்கான ஆளை நான் கொண்டு வருவேன் என்று ராமதாஸ் சொன்னது முகுந்தனை மனதில் வைத்துதானா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பாமகவில் முகுந்தனின் நியமனைத்தை வைத்து சர்ச்சைகள் எழுந்து பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்த பிறகு எல்லா பாமக தலைவர்களும் ஒரே குரலில் சொன்னது ஒரு விஷயத்தை சொன்னார்கள்.

சித்திரை முழுநிலவு நாள் மாநாட்டில் ராமதாஸும் அன்புமணியும் ஒன்றாக மேடை ஏறுவார்கள். அப்போது இந்தப் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து விடும். ஆனால் பிரச்னை இன்னும் முடிந்து விடவில்லை என்ற அறிகுறிடோடு மட்டுமல்லாமல், இன்னும் அதிகமாகி இருக்கிறதோ என்ற கேள்வியோடு மாநாடு முடிந்திருக்கிறது.