பாஜக- பாமக இருந்தால்.. அங்கு இணையவே மாட்டோம் - ஒரே போடுபோட்ட திருமா
பாஜக- பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் எப்பொழுதும் இணைய மாட்டோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாஜக- பாமக
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு தேர் திருவிழாவின் போது தேரை வடம் பிடிப்பது அனைத்து சமூக மக்களின் உரிமை.
தலித் மக்கள் அவ்வா று படம் பிடிக்க சென்றபோது அவர்கள் தாக்கப்பட்டு இருப்பதாக தரவுகள் கிடைத்தது. இரு சமூக மக்களுக்கு இடையே முன் பகை இருந்துள்ளது அந்த முன்பகையின் அடிப்படையில் தான் திருவிழாவிற்கு சென்றவர்கள் தாக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
திருமா உறுதி
அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் தொடர்பாக நீதிமன்ற வழக்கு அதனால் இரு சமூகத்திற்கும் இடையே ஏற்பட்ட முன் பகை காரணமாக தான் தாக்குதல் நடைபெற்று இருப்பதாக அறிக்கையில் தெரிவித்தேன். அந்த அறிக்கை தவறு என்றால் அதை தீர்த்துக் கொள்கிறேன்.
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அகண்ட பாரதம் என்கிற இந்துத்துவக் கொள்கையின் அடிப்படையில் தான் பாஜகவினர் போரை விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் தான் வெளியுறவு கொள்கையை தீர்மானித்துள்ளார்கள்.
இது குறித்து இன்றைய சூழலில் எந்த பொருளில் கருத்து கூறினாலும் இந்துத்துவவாதிகள் அதை எதிராக தான் பார்ப்பார்கள். பாஜக- பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் எப்பொழுதும் இணைய மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.