நாம் ஆள வேண்டும்.. என் பின்னே வாங்க; வேலை வாங்கி தருகிறேன் - அன்புமணி அழைப்பு
நல்ல கல்வியும், வேலைவாய்ப்பையும் பெற்று தருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில் 2013-ல் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 21 வது ஆண்டாக நடைபெற்றது.
தொடர்ந்து மாநாட்டில் பேசிய அன்புமணி," தமிழகத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய வன்னியர் சமுதாயம் மிக மிக பின்தங்கிய சமுதாயமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும் ஆனால் முதலமைச்சருக்கு இதைப் பற்றிய எந்த கவலையும் கிடையாது.
வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல இதே போல ஒடுக்கப்பட்ட வெடிப்பு நிலையில் இருக்கக்கூடிய அனைத்து சமுதாய மக்களையும் முன்னேற்றத்திற்கு கொண்டுவர தமிழக அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். எம்பிசியில் 115 சமுதாயங்கள் உள்ளது. அதில் 114 சமுதாயங்களின் சதவீதம் வெறும் 6.8சதவீதம்.
அன்புமணி உறுதி
வன்னியர் சமுதாயம் மட்டும் 14.2 சதவீதம் உள்ளது. இவர்களில் யார் அதிகம் இட ஒதுக்கீட்டை எடுத்து செல்கிறார்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் ? யார் யாரோ பின்னால் நீங்கள் செல்கிறீர்கள் அவர்கள் பின்னால் செல்லாதீர்கள் உங்கள் அண்ணன் என் பின்னால் வாருங்கள்.
உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மாவீரன் குரு போல நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நல்ல படிப்பையும் வேலைவாய்ப்பையும் நான் வாங்கித் தருகிறேன். நாம் ஆள வேண்டும் நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது.. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம் இந்த மண்ணின் பூர்வ குடிகள் நாம்.
வீராணம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெலிங்டன் ஏரி மதுராந்தகம் ஏரி வரை வெட்டியது நம்முடைய முன்னோர்கள். இந்த மண்ணை பாதுகாக்க நம் பாட்டன் பூட்டன் பாதுகாத்து இந்த மண்ணை காத்து வைத்தான்.. இந்த மண்ணின் பூர்வ குடி மக்கள் நாம்” என தெரிவித்துள்ளார்.