விஜயகாந்த் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி; கதறிய பிரேமலதா - பிரதமர் இரங்கல்!
விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் மறைவு
தனது நடிப்பு,அரசியல் திறமையினாலும் வல்லமை பெற்றிருந்த ஜாம்பவான் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர்களுடன் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். மேலும், கேப்டன் விஜயகாந்த் இழந்துவாடும் குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
நல்ல உள்ளத்திற்க்கு சொந்தக்காரரான விஜயகாந்த் திரையுலகிலும் பொதுவாழ்விலும் முத்திரை பதித்தவர். கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். விஜயகாந்த் உடனான எனது நட்பு எந்தக் காலத்திலும் எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவில்லை. தமிழுணர்வும் தாரள மனமும் கொண்ட உன்னத மனிதர் விஜயகாந்த்.
முழு அரசு மரியாதை
இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக்கொண்டிருக்கிறது. முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடலுக்கு இறுதிசடங்கு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி தனது வலைதளப்பக்கத்தில், தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயக்காந்த்தின் நடிப்பு பலரின் இதயங்களை கவர்ந்துள்ளது. பொதுசேவையில் ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. விஜயகாந்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவு கூர்கிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.