தூரத்து இடி முழக்கமாய் இடித்து கேப்டனாக உயர்ந்த மாமனிதனின் முழு சினிமா வரலாறு

Vijayakanth Vijayakanth Tamil nadu
By Karthick Dec 28, 2023 05:32 AM GMT
Report

இன்றளவும் கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயகாந்த் இன்று காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூரத்து இடி முழக்கம்

இனிக்கும் இளமை என்ற படம் கடந்த 1979-ஆம் ஆண்டு வெளியானது. அப்படத்தில் வில்லனாக நடித்த அந்த ஒரு நடிகர் பின்நாளில் தமிழகத்தை கட்டி ஆள்வார் என யாரும் எதிர்பார்த்திடவில்லை. விஜயராஜ் என்ற அவர் விஜயகாந்த்'தாக மாறி 1980-ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர்.

vijayakanth-cinema-life-hsitory

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெரிய செல்வந்தர் குடும்பம் என்ற போதிலும், சினிமா மீது கொண்ட ஆர்வத்தில் சென்னை வந்து பல இன்னல்களை சந்தித்தார் விஜயகாந்த்.சிறிய சிறிய படங்களில் துவங்கிய அவரின் சினிமா வாழ்க்கையில் எஸ்.ஏ.சந்திரசேகரின் "சட்டம் ஒரு இருட்டறை" படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

கேப்டன் அவதாரம்

மாபெரும் வெற்றியை இப்படம் பெற, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவருக்கு அடுத்த மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது "நூறாவது நாள்". அப்போது சினிமா படித்து வரும் இளைஞர்களுக்கு பெரிதும் வாய்ப்புகள் சினிமாவில் வழங்கப்படாத நிலையில், முதல் ஆளாக அவர்களை ஆதரித்தவர் விஜயகாந்த்.

vijayakanth-cinema-life-hsitory

ரஜினி கமல் என நாயகர்கள் பெரும் கோலோச்சிய காலகட்டத்தில் தனக்கென தனி பாதையை உருவாக்கி பி அண்ட் சி சென்டர்களில் ஆதிக்கம் செலுத்த துவங்கினார் விஜயகாந்த். 1980-களின் பிற்பகுதியில் தொடர் வெற்றிப்படங்களில் நடிக்க துவங்கிய அவர், வைதேகி காத்திருந்தால், நானே ராஜா நானே மந்திரி, அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள், உழவன் மகன், வீரன் வேலுத்தம்பி, பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மன செல்வன், ராஜநடை என வெறி படங்கள் வரிசை கட்டின.

vijayakanth-cinema-life-hsitory

ஒரு ஆண்டில் 16 படம் நடித்தவர். பல அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர். வாய்ப்பு தேடும் நடிகர்கள், துணை இயக்குனர்கள் என பலருக்கும் சோறு போட்டவர் என பலராலும் இன்றும் போற்றப்படும் விஜயகாந்த் சினிமாவில் பல அடுத்தடுத்த மாற்றங்களையும் கொண்டு வந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவர்க்கும் கரி சோறு தமிழ் சினிமாவில் போடவேண்டும் என கூறி அதனை செய்தும் காட்டியவர் விஜயகாந்த்.

vijayakanth-cinema-life-hsitory

90-களில் முன்னணி நாயகனாக அதிரடி ஆக்ஷன் களத்தில் இறங்கினர் விஜயகாந்த். புலன் விசாரணை, சத்ரியன், கேப்டன் பிரபாகரன்(100-வது படம்), மாநகர காவல், சின்ன கவுண்டர், தாய் மொழி, சேதுபதி, ஹானஸ்ட் ராஜ் என அனைத்தும் ஆக்ஷன் அதகளமான வெற்றி படம் தான். கேப்டன் பிரபாகரன் படம் அதிரி புதிரி ஹிட்டாக கேப்டனாக உருப்பெற்றார் விஜயகாந்த். அன்று முதல் இன்று வரை விஜயகாந்த் கேப்டன் என்று தான் ரசிகர்களால் வாஞ்சையோடு அழைக்கப்படுகிறார்.

vijayakanth-cinema-life-hsitory

நடிகர் விஜய்'காக கௌரவ தோற்றத்தில் "செந்தூரப்பாண்டி" என்ற படத்திலும் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். அடுத்தடுத்து ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த விஜயகாந்த் இந்த நூற்றாண்டின் முதல் வெற்றி படத்தையும் கொடுத்தவர் என்ற பெருமையையை பெற்றுள்ளார். வானத்தை போல படம் 2000-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட்டாக மாறியது.

vijayakanth-cinema-life-hsitory

அதனை தொடர்ந்து வல்லரசு, நரசிம்மா, தவசி, ராஜ்ஜியம், ரமணா, சொக்க தங்கம், எங்கள் அண்ணா, கஜேந்திரா, பேரரசு என்று 2000-ஆம் ஆண்டுகளிலும் தொடர் வெற்றிகளை பதிவு செய்தார். விஜயகாந்த் கடைசியாக 2009-ஆம் ஆண்டு எங்கள் ஆசான் படத்தில் நடித்திருந்தார் விஜயகாந்த். திரையுலகில் இருந்த போதே, கருணாநிதியுடன் நெருக்கம் கட்டிய விஜயகாந்