விஜய பிரபாகரனுக்கு தேமுகவில் முக்கிய பதவி - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவில் பதவி வழங்குவது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேமுதிக கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விஜயகாந்த் காலமானதையடுத்து பொதுச் செயலாளராக பிரேமலதா இருந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து விஜய பிரபாகரனுக்கு கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி அனைத்து மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசி விஜய பிரபாகரனுக்கு உரிய பதவி வழங்கப்படும்.
“எங்க அப்பாவைத்தான் ஒழித்துக்கட்டினீங்க... என்னையும் ஒழித்து கட்டிவிடாதீங்க” – விஜய பிரபாகரன் ஆவேசம்!
பிரேமலதா விஜயகாந்த் தகவல்
தமிழகம் முழுக்க எல்லா இடங்களிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பள்ளிகளில் கூட போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் தடுக்க வேண்டிய அரசு, வெறும் வாய் வார்த்தைகளை பேசிக்கொண்டுள்ளது.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சி நடத்தி வருகின்றனர். விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் திமுக அதிகமான வேலைகள் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை.
அந்தந்த கட்சிகள் தத்தமது வேலைகளை செய்துகொண்டுதான் வருகின்றன என்ற பிரேமலதா, அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம், அது தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.