உங்க முன்னாடி எம்.பி.யா வரனும்னு நெனச்சேன், ஆனா இப்போ...விஜய பிரபாகரன் பேச்சு!

Vijayakanth DMDK Virudhunagar Premalatha Vijayakanth
By Swetha Jul 12, 2024 07:26 AM GMT
Report

உங்க முன்னாடி எம்.பி.யா வரனும்னு நெனச்சேன் என விஜய பிரபாகரன் கூட்டத்தில் பேசியுள்ளார்.

விஜய பிரபாகரன் 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிட்டிருந்தார். அப்போது தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன், காங்கிரஸ் வேப்டாளர் மாணிக்கம் தாகூர் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது.

உங்க முன்னாடி எம்.பி.யா வரனும்னு நெனச்சேன், ஆனா இப்போ...விஜய பிரபாகரன் பேச்சு! | Vijaya Prabhakaran Speech In Virudhunagar Meeting

ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்த விஜய பிரபாகரன், இறுதியில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டத்தை விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் நடத்தினார்.

அப்போது பேசிய அவர் , உங்க முன்னாடி எம்.பி.,யா வரணும்னு நினைச்சேன். ஆனா இப்ப விஜய பிரபாகரனா வந்து நிக்கிறேன். தோல்வியை தழுவி விட்டோம். இல்லையென்றால் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடக்கிறதா? - தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பதில்

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடக்கிறதா? - தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பதில்

எம்.பி.யா வரனும்னு..

மக்களவைத் தேர்தலில் நாடே உற்றுப் பார்த்த தொகுதியாக விருதுநகர் தொகுதி இருந்தது இரவு 11 மணி வரை வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இழுப்பறி இருந்தது. இருந்தாலும் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது இந்த விருதுநகர் மக்கள் தான். எனக்கு வாக்களித்து அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்க முன்னாடி எம்.பி.யா வரனும்னு நெனச்சேன், ஆனா இப்போ...விஜய பிரபாகரன் பேச்சு! | Vijaya Prabhakaran Speech In Virudhunagar Meeting

அதிமுக -தேமுதிக வலுவான கூட்டணி அமைத்துள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறுவோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ஒழிப்போம் என்றார்கள். ஆனால் ஒழிக்கவில்லை. தொடர்ந்து இதுபோன்று போலியான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றார்.

விஜய பிரபாகரன் பேசிக் கொண்டிருக்கும்போது தேமுதிக பெண் தொண்டர் ஒருவரை பார்த்து, நல்லா இருக்கீங்களா அம்மா, பிரச்சாரம் அப்போ நல்லா டான்ஸ் ஆடுனீங்க. ஆளை பார்க்க முடியல என்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.