அவ்வளவு நெருக்கம்; 2 பேரும் அந்த முடிவை எடுத்துள்ளோம் - தமன்னாவின் காதலர் பளீச்!
தமன்னா குறித்து அவரது காதலர் விஜய் பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தொடர்ந்து ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். அதனை இருவரும் உறுதி செய்துள்ளனர்.
காதலர் தகவல்
கடைசியாக அவர் நடித்த அரண்மனை 4 படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் தமன்னாவின் காதலரான விஜய் வர்மா சமீபத்திய பேட்டி ஒன்றில்,
”நானும் தமன்னாவும் சேர்ந்து அடிக்கடி புகைப்படங்கள் எடுத்துக்கொள்வோம். அப்படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டும் என்னிடம் 5000 ஃபோட்டோக்கள் இருக்கும். அதை சோஷியல் மீடியாவில் பகிரலாம்.
ஆனால் அவற்றை பகிரக்கூடாது என்று இருவருமே சேர்ந்து முடிவு எடுத்திருக்கிறோம். அந்தப் புகைப்படங்கள் எனது இதயத்துக்கு நெருக்கமானவை. நாங்கள் இருவருமே ஒருவரையொருவர் ரொம்பவே மதித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.