வெறித்தனமா லவ் பண்றேன்; வெட்கமா இருக்கு - தமன்னா காதலர் ஓபண்டாக்!
தமன்னா உடனான காதல் குறித்து விஜய் வர்மா மனம் திறந்துள்ளார்.
விஜய் வர்மா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலரில் களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில், தமன்னாவில் காதலர் விஜய் வர்மா சமீபத்திய பேட்டி ஒன்றில், “ நாங்கள் ஒருவரையொருவர் டேட்டிங் செய்கிறோம் என்பது இப்போது நன்றாகவே புரிகிறது.
தமன்னாவுடன் காதல்
நான் தமன்னாவை காதலிக்கிறேன். ஆம், நான் அவளை மகிழ்ச்சியாகவும், வெறித்தனமாகவும் காதலிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் வில்லன் அத்தியாயம் முடிவடைந்து காதல் அத்தியாயம் தொடங்குகிறது.

என்னுடைய கேரியரின் ஒட்டுமொத்த காலத்திலும் நான் என்னுடைய காதல் விவகாரங்களை பற்றி பெரிதாக பேசியதில்லை. நான் அதனை அப்படித்தான் கொண்டு செல்ல விரும்புகிறேன். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு நேரமும், இடமும் இருக்கிறது.
அப்போது நான் தமன்னாவுடனான உறவைப் பற்றி விரிவாக பேசுவேன். தற்போது அதனைப்பற்றி பேச வெட்கமாக இருக்கிறது.” எனப் பேசியுள்ளார்.
22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ் IBC Tamil
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள் IBC Tamil