தமன்னாவுடன் திருமணம்.. பதில் கொடுத்த விஜய் வர்மா - பிரேக் அப்-ஆ?

Vinothini
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய் தமன்னாவுடன் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
தமன்னா
திரையுலகில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் வியாபாரி படத்தில் நடித்தார் ஆனால் இவர் பெரிதளவில் பேசப்படவில்லை. அதன்பின்னர் இவர் கல்லூரி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் பல சர்ச்சைகளை கிளப்பியது. அதில் நடித்த நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதாக இருவரும் உறுதி சேய்தனர்.
நடிகர் பேட்டி
இந்நிலையில், திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேசமயம் விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி இரு வீட்டார் தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியானது. சமீபத்தில் விஜய் வர்மாவிடம் செய்தியாளர்கள் தமன்னாவுடன் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், 'இதற்கு பதிலளிக்க முடியாது’ என ஒரே வார்த்தையில் கூறிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் விஜய் வர்மா பதிலளிக்க மறுக்கிறார்?ஒருவேளை இருவருக்கும் இடையே பிரச்சனை இருக்குமோ என்று சந்தேகத்தை கிளப்பிவருகின்றனர்.