தமன்னாவுடன் டேட்டிங்; திருமணம் எப்போது - பிரபல நடிகர் பளீச் பதில்
தமன்னா குறித்து நடிகர் விஜய் வர்மா அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.
தமன்னா
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. சமீப காலமாக நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் புத்தாண்டை கொண்டாட கோவாவுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி பேசுபொருளானது.
முன்னதாக, தில்ஜித் தோசாஞ்ச் கான்சர்ட்டில் இருவரும் ஒன்றாக கலந்துக் கொண்டு நேரம் செலவிட்டனர். மேலும், தனது பிறந்தநாளை கொண்டாடிய தமன்னாவுடன் அவர் வீட்டில், விஜய் இருந்தார். இதனால் இருவரும் காதலில் இருப்பதாக ரசிகர்கள் தீவிரமாக நம்பினர்.
திருமணம்?
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் வர்மாவிடம் செய்தியாளர் ஒருவர் ஏதாவது சந்தோஷமான சுப செய்தி இருக்கா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு விஜய் வர்மா சீக்கிரமே நல்ல படத்தை கொடுக்க முயல்கிறேன் என சொல்லி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.
இதற்கிடையில், மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு ஜோடியாக சென்ற இருவரும் பின்னர் காரில் ஒன்றாக கிளம்பி சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது.