நீ எல்லாம் ஒரு ஆளா?.. அந்த ஒரு விஷயத்தினால் நிறைய இழந்துருக்கேன் - நடிகர் எமோஷனல் பேட்டி!
சீரியல் நடிகர் தனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் தேவ் ஆனந்த்
சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர் தேவ் ஆனந்த். இவர் சில படங்களிலும் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலில் நடித்திருந்தார். தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய இத்தனை வருட திரை வாழ்க்கை குறித்தும் தன்னுடைய குடும்பத்தை பற்றி கூறியுள்ளார்.
அதில், "தனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான் நடந்தது என்றும் தங்களுக்கு இப்ப வரைக்கும் குழந்தை இல்லை. எனது தம்பியின் மகனை தான் வளர்த்து வருகிறேன். தம்பியின் மகன் அப்பா என்று தான் அழைப்பார், என்னுடன் பாசமாக இருப்பான்" என்று கூறியுள்ளார்.
பேட்டி
இதனை தொடர்ந்து அவர், "இந்த நடிப்பு வாழ்க்கையில் பல வேதனைகளை நான் அனுபவித்து இருக்கேன். ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு அதிகமாக கோபம் வரும் அதனாலே என்னுடைய வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்து இருக்கிறேன். நான் 25 வருஷமா நடிச்சுகிட்டு இருக்கிறேன். பலர் இப்ப வந்துகிட்டு நீங்க எல்லாம் ஒரு ஆளா என்கிற மாதிரி நடந்து கொள்கிறார்கள்.
அது பார்க்கும்போது கடுப்பாக இருக்கிறது. சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். ஆனாலும் 2006 ஆம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் வைஷ்ணவியின் தற்கொலைக்கு சின்னத்திரையில் அவருடன் பணியாற்றிய தேவ் ஆனந்த் தான் காரணம் என்று வைஷ்ணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்திருந்தது. அதில் என்ன நடந்தது என்று எனக்கும் வைஷ்ணவிக்கும்தான் தெரியும். சாட்சி சொல்ல வேண்டியவா இப்போ உயிரோடு இல்லை. நான் சொன்னால் மட்டும் நம்ப போறாங்களா? என்ன நடந்தது என்று தெரியாமல் கமெண்ட் போடுவதற்கு யாருக்கும் அருகதையும் இல்லை, உரிமையும் தகுதியும் கிடையாது.
நான் சொன்னால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது. அவன் பொய் சொல்கிறான் என்று சொல்வார்கள். இந்த உலகத்தில் வாழ்பவர்கள் பொய் சொல்வதை தான் ஏற்றுக்கொள்கிறார்களே தவிர உண்மை சொன்னால் யாரும் காது கொடுத்து கேட்பதில்ல" என்று பேசியுள்ளார்.