ஆமாம்.. நான் கிளாமர் தான் காட்டுறேன், அது இல்லாமா இங்க இருக்கமுடியாது - நடிகை ஓபன் டாக்!

New Tamil Cinema Tamil TV Serials Tamil Actress
By Vinothini Aug 08, 2023 04:00 PM GMT
Report

பிரபல சீரியல் நடிகை தனது வாழ்க்கை குறித்து பேட்டியில் பேசியுள்ளார்.

சீரியல் நடிகை

தமிழ் சீரியல் நடிகையான பானுமதி விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே, நம்ம வீட்டு பொண்ணு, திருமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சிந்துபாத், ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார், இவர் கடந்த 5 வருடங்களாக சீரியலில் நடித்து வருகிறார்.

serial-actress-opens-about-her-personal-life

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிளாமராக இருப்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை பேட்டி

இந்நிலையில், அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், "நான் மட்டுமில்லை, இங்கு எல்லாருமே தான் க்ளாமராக இருக்க தான் ட்ரை பண்றாங்க. க்ளாமரா இல்லன, இந்த இடத்தில் இருக்க முடியாது. க்ளாமர் என்பது பார்க்கும் பார்வையில் தான் உள்ளது.

serial-actress-opens-about-her-personal-life

நான் க்ளாமரா டிரஸ் பண்ண மாட்டேன். ஆனால் க்ளாமரான எக்ஸ்பிரஷன் கொடுத்து நடிப்பேன். நான் ஆசைப்பட்டு நடிக்க வரவில்லை. என் குடும்பத்தை பார்த்துக்கொள்ள எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் நடிக்க வந்தேன்.

ஆனால், இப்போது, இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று மிகுந்த ஈடுபாடோடு வேலை செய்துவருகிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி என் நண்பர்களுக்கு கூட தெரியாது" என்று கூறியுள்ளார்.