அந்த நடிகை உள்ளே இழுத்துட்டாரு; அந்தளவுக்கு நெருக்கம் - போட்டுடைத்த விஜய்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய் வர்மா சாரா அலிகான் குறித்து பேசிய தகவல் வைரலாகி வருகிறது.
விஜய் வர்மா
நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் விஜய் வர்மாவுடன் படுக்கையறை காட்சிகளில் நடித்தது ரசிகர்களை வாய்பிளக்க செய்தது. அதன்பின் இருவரும் காதலிப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஹோமி அடாஜானியா இயக்கத்தில் மர்டர் முபாரக் படம் வெளியாகியுள்ளது. இதில், விஜய் வர்மா, சாரா அலி கான், ஜான்வி கபூர், கரீஷ்மா கபூர், பங்கஜ் திரிபாதி மற்றும் ஆதித்யா ராய் கபூர் என ஏகப்பட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சாரா அலி கான்
விஜய் வர்மாவுக்கும் சாரா அலி கானுக்கும் இந்த படத்தில் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகியுள்ளது. லிப் லாக் முத்தக் காட்சி முதல் படுக்கையறை காட்சிகள் என ஏகப்பட்ட இன்டிமேசி காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விஜய் வர்மா, ஆரம்பத்தில் சாரா அலி கானுடன் எப்படி இதுபோன்ற காட்சிகளில் நடிக்கப் போகிறேன் என யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், தனது கதாபாத்திரத்தில் ஆழமாக இறங்கிய சாரா அலி கான் என்னையும் உள்ளே இழுத்துக் கொண்டார். அதனால், தான் அவருடன் இந்தளவுக்கு நெருக்கமாக நடிக்க முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.