'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலிருந்து விலகல் - பிரபலம் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Tamil Cinema Cooku with Comali Tamil TV Shows Tamil Actors Tamil Actress
By Jiyath May 05, 2024 11:07 AM GMT
Report

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக நாஞ்சில் விஜயன் அறிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த வாரம் பிரம்மாண்டமாக தொடங்கியது. செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ரக்ஷன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

புதிய தயாரிப்பு நிறுவனம் என்பதால் இந்த சீசன் எப்படி இருக்கப் போகிறது என பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். மேலும், புதிய கோமாளிகள் சிலரும் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருந்தார்கள்.

இளையராஜா சரியான பணத்தாசை பிடிச்சவரு; அவரு பண்றது தப்பு - விளாசிய பிரபலம்!

இளையராஜா சரியான பணத்தாசை பிடிச்சவரு; அவரு பண்றது தப்பு - விளாசிய பிரபலம்!

நாஞ்சில் விஜயன் 

அந்தவகையில் நாஞ்சில் விஜயனும் புது கோமாளியாக பங்கேற்றிருந்தார். இந்நிலையில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் "குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து நான் விலகுகிறேன்.

எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த வித பிரச்னையும் இல்லை. பாக்ஸ் ஆபீஸ் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் இனி பங்கேற்க மாட்டேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி மக்களே” என்று குறிப்பிட்டுள்ளார். நாஞ்சில் விஜயனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.