இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடும் டாப் 5 இடங்கள் - எந்தெந்த நாடுகள் தெரியுமா?
கிறிஸ்துமஸ் பண்டிகை
இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் நாள் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவர்கள் பல்வேறு முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடும் டாப் 5 நாடுகளை பற்றி பார்ப்போம்.
பெத்லஹேம்
இயேசு கிறிஸ்து பிறந்த இடம் பெத்லஹேம் என்பதால் அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை மற்ற நாடுகளை விட பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
சாண்டா கிளாஸ்
கிராமம் பின்லாந்து நாட்டின் லாப்லாண்ட் பகுதியில் சாண்டா கிளாஸ் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இயேசுவின் பிறந்தாநாளை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
நியூயார்க் சிட்டி
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் சிட்டியில் உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
போண்டி கடற்கரை
இந்த கடற்கரை ஆஸ்திரேலியாவில் உள்ளது. இங்கு இயேசு கிருஸ்துவின் பிறந்தநாளை கொண்டாட பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் வருகின்றனர். போண்டி கடற்கரை ஒரு சுற்றுலாத்தலமாகும்.
இத்தாலி
இந்நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தில் கலர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆடல் பாடல் என பல நாட்டவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.