இளையராஜா சரியான பணத்தாசை பிடிச்சவரு; அவரு பண்றது தப்பு - விளாசிய பிரபலம்!
தயாரிப்பாளர் கே.ராஜன் இசையமைப்பாளர் இளையராஜாவை விமர்சித்து பேசியுள்ளார்.
இளையராஜா
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்பி ரைட்ஸ் எனப்படும் காப்புரிமை வேண்டும் என சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் டைட்டில் டீசரில்,
தனது டிஸ்கோ பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும், ஒரு பாடலுக்கு வரிகளை விட இசைதான் முக்கியமானது எனவும் அவர் பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன், இளையராஜாவை விமர்சித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதே தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம்.
மிகப்பெரிய தவறு
கொத்தனார் தினசரி கட்டடம் கட்டுகிறார் அவருக்குக் கூலி கொடுத்து விடுகிறோம். கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்த கட்டடம் எனக்கு தான் சொந்தம்.
நான்தான் கட்டினேன் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ. அதேபோல எங்கள் இசை இசையமைப்பாளருக்கு தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. நாங்கள் அதற்குரிய சம்பளத்தை கொடுத்துவிட்டோம். அவர் எங்களுக்கு வேலை செய்தார். அது யாரா இருந்தாலும் சரி. அவர் ஒரு பெரிய இசைஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை.
பெரிய பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது. பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம்” என்று தெரிவித்துள்ளார்.