பிரச்சனையே அதனால தான்; அவன நம்பவே முடியாது - தனது மகன் குறித்து நடிகர் விஜய்!
தனது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இதுவரை 67 படங்களில் அவர் நடித்து முடித்து விட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீத என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இதில் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.
நம்பவே முடியா
ஆனால், இதற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகியும், இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இந்நிலையில் தனது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து நடிகர் விஜய் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது ரசிகர்களுடனான ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியாகும். அதில் ரசிகர் ஒருவர் “உங்கள் மகன் சினிமாவில் வேறு யாருடைய ரசிகர்? என்று கேள்வி எழுப்பியிருப்பார். அதற்கு பதிலளிக்கும் விஜய் "என்னுடைய மகன் சஞ்சய் அப்பப்ப மாறிட்டே இருப்பாரு.
அன்றைய தேதிக்கு என்ன படம், பாட்டு ஹிட்டோ அதற்கேற்ற மாதிரி மாறிவிடுவார். திடீர்னு சூர்யா ரசிகன்னு சொல்லுவான், அடுத்த வாரம் ஆர்யா ரசிகன்னு சொல்லுவான். அவனை நம்பவே முடியாது” என்று தெரிவித்திருப்பார்.