விஜய் என்ன செய்றாருனு பார்ப்போம்.. எனக்கும் அந்த ஆசை இருக்கு - நடிகை வாணி போஜன்!
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகை வாணி போஜன் பேசியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வலம் வந்த வண்ணம் இருந்தது. அதனை உண்மையாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கட்சி பெயரையும் அறிவித்தார் நடிகர் விஜய்.

அதன்படி கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவில்லை.
அதே நேரத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று விஜய் அறிவித்தார். மேலும், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
நடிகை வாணி போஜன்
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை வாணிபோஜன் கூறுகையில் "நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை நான் வரவேற்கிறேன். அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.
அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம். நான் செங்களம் வெப் தொடர் நடிக்கும்போது எனக்கும் அரசியலில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இப்போதும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Singappenne: ஆனந்தி இருக்கும் இடத்திற்கு வந்த ரகு... அன்புவிடம் காதலை வெளிப்படுத்தும் தருணம் Manithan
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan