விக்னேஷ் சிவனுடன் அப்படி சண்டை போட்டேன்; நயன் தான் அதை செஞ்சாங்க - விஜய் சேதுபதி

Vijay Sethupathi Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Sumathi Jun 15, 2024 09:00 AM GMT
Report

விக்னேஷ் சிவனிடம் சண்டை குறித்து விஜய் சேதுபதி மனம் திறந்துள்ளார்.

நானும் ரௌடிதான்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய படம் நானும் ரௌடிதான். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விக்னேஷ் சிவனுடன் அப்படி சண்டை போட்டேன்; நயன் தான் அதை செஞ்சாங்க - விஜய் சேதுபதி | Vijay Sethupathi About Fight With Vignesh Shivan

இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். அதன்பின் திருமணம் செய்துக்கொண்டு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். விக்னேஷ் சிவன் எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார்.

லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் குறித்து விஜய் சேதுபதி பேசுகையில்,

அந்த நடிகையுடன் என்னால் ரொமாண்டிக்கா நடிக்க முடியாது.. ஏன்னா... விஜய் சேதுபதி ஓபன் டாக்!

அந்த நடிகையுடன் என்னால் ரொமாண்டிக்கா நடிக்க முடியாது.. ஏன்னா... விஜய் சேதுபதி ஓபன் டாக்!

விஜய் சேதுபதி தகவல்

“நானும் ரௌடிதான் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கிற்கு பிறகு விக்னேஷ் சிவனை அழைத்து சண்டை போட்டேன். நீங்கள் எனக்கு நடிப்பு கற்றுத்தர முயற்சிக்கிறீர்கள் என்னை புரிந்துகொள்ளவில்லை என்று சொன்னேன். நான்கு நாட்களுக்கு பிறகு நயன் என்னிடம் வந்து உங்கள் இருவருக்கும் என்ன பிரச்னை என்று கேட்டு சமாதானப்படுத்தினார்.

விக்னேஷ் சிவனுடன் அப்படி சண்டை போட்டேன்; நயன் தான் அதை செஞ்சாங்க - விஜய் சேதுபதி | Vijay Sethupathi About Fight With Vignesh Shivan

விக்கி திரைக்கதையைக் கூறியபோது, ​​அது அருமையாக இருந்தது. ஆனால், நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள நேரம் பிடித்தது. அந்த கேரக்டரில் நடிப்பது எளிதல்ல என்று விஷ்ணு விஷால்தான் சரியாகச் சொன்னார் என்று நினைக்கிறேன். அந்த கதாபாத்திரம் எனக்கு புரியவில்லை.

அந்த நேரத்தில் நான் மிகவும் உறுதியில்லாமல் இருந்தேன். விக்னேஷ் சிவன் ஒரு சிறப்பான இயக்குனர். புதிய தலைமுறை படத் தயாரிப்பாளர். நீங்கள் அவரை நம்பி உடன் சென்றால், அவர் உள்ளே நிறைய மேஜிக் செய்வார்” எனத் தெரிவித்துள்ளார்.