அந்த நடிகையுடன் என்னால் ரொமாண்டிக்கா நடிக்க முடியாது.. ஏன்னா... விஜய் சேதுபதி ஓபன் டாக்!
நடிகை க்ரித்தி ஷெட்டியுடன் இணைந்து நடிக்க முடியாது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இவர் நடிப்பில் 2021ல் வெளியான லாபம் படத்தில் நடிக்கவிருந்த நடிகையை ரிஜெக்ட் செய்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். முன்னதாக, தெலுங்கில் அதே 2021ல் வெளியான உப்பெனா திரைப்படத்தில்
என் மகள் வயது
நடிகர் விஜய் சேதுபதி க்ரித்தி ஷெட்டிக்கு தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுகுறித்து பேசிய விஜய் சேதுபதி, "லாபம் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் உப்பெனா படத்தின் படப்பிடிப்பும் நடந்து வந்தது.
அப்பாவாக நடிக்கும் அதே பெண்ணுடன் எப்படி ரொமான்ஸ் செய்யமுடியும் ? அதனால்தான் க்ரித்தி ஷெட்டி வேண்டாம் என பட குழுவிடம் கூறினேன். அதுமட்டுமில்லாமல், க்ரித்தி ஷெட்டிக்கு என் மகள் வயதுதான் இருக்கும், அவரை என் மகளாகத்தான் நான் பார்த்தேன், மகளுடன் எப்போதும் என்னால் ரொமான்டிக்காக நடிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.