விஜய் சேதுபதியை கண்டிப்பா கல்யாணம் செஞ்சுக்கணும் - ஆசையை கூறிய சூப்பர் ஸ்டார்!
விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
வெற்றிக் கொண்டாட்டம்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜவான் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, ஜவான் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் மும்பையில் நடந்தது.
அதில் கலந்துக்கொண்டு விஜய் சேதுபதி பேசுகையில், ஷாருக்கான் என்கிற பெயர் போதும். அவர் அன்பை மட்டுமே கொடுக்கிறார். யாராவது ஷாருக்கான் என எழுதினால் அதை கூட ஹக் பண்ணலாம். அது போதும். ஐ லவ் யூ சார் என்றார்.
ஷாருக்கான் ஆசை
அதற்கு பதிலளித்த ஷாருக்கான், ஐ லவ் யூ டூ . நான் உங்களுக்கு ப்ரொபோஸ் செய்யலாம், நாம் திருமணம் செய்து கொள்ளலாம். இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடிக்கலாம் என்றார். இதனைக் கேட்ட விஜய் சேதுபதி தப்பில்ல சார்.
ஷாருக்கானின் மைண்ட் செக்ஸியாக இருக்கிறது. அவர் கூட்டத்தை கையாளும் விதம் அருமை என்று தெரிவித்தார்.
அதற்கு, நாம் தற்போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் என்னை ஹேன்ட்சம், செக்ஸி என்று கூறிவிட்டீர்கள் விஜய். ஹமாரா சேனாபதி, விஜய் சேதுபதி என ஷாருக்கான் கூறியது கவனம் பெற்றுள்ளது.