என் பையன் வெளிய போக சொல்லிட்டான்; நா அங்க இருந்தா.. விஜய் சேதுபதி ஓபன் டாக்!

Vijay Sethupathi Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 10, 2024 07:32 AM GMT
Report

தனது மகன் சூர்யா சினிமாவில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.  

விஜய் சேதுபதி

தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, தர்மதுரை, விக்ரம் வேதா, இமைக்கா நொடிகள், மாஸ்டர், மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

என் பையன் வெளிய போக சொல்லிட்டான்; நா அங்க இருந்தா.. விஜய் சேதுபதி ஓபன் டாக்! | Actror Vijay Sethupathi Talks About His Son

கடைசியாக இவர் நடிப்பில் :யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தமிழ் படம் வெளியாகியிருந்தது. மேலும், தற்போது ஹிந்தி சினிமா பக்கம் எட்டிப் பார்த்துள்ள விஜய் சேதுபதி அங்கும் வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவரது 50-வது படமான 'மகாராஜா' ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, தனது மகன் சூர்யா சினிமாவில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

என் புருஷன் 10 வருஷமா அதுக்காக தவிச்சுருக்காரு - ஓப்பனாக சொன்ன பாவனா!

என் புருஷன் 10 வருஷமா அதுக்காக தவிச்சுருக்காரு - ஓப்பனாக சொன்ன பாவனா!

நீ வெளிய போயிடு

அவர் கூறியதாவது "நானும் ரவுடி தான் பட ஷூட்டுக்கு வந்தான் என் பையன். அப்போ இயக்குநர் விக்னேஷ் சிவன் அவனை பார்த்துட்டு, உங்களோட சின்ன வயசு சீன்ஸ் உங்க பையன வச்சு எடுத்துக்கவானு கேட்டான்.

என் பையன் வெளிய போக சொல்லிட்டான்; நா அங்க இருந்தா.. விஜய் சேதுபதி ஓபன் டாக்! | Actror Vijay Sethupathi Talks About His Son

இதப்பத்தி என் பையன்கிட்ட நான் கேட்டப்போ, அவன் வேணாம்னு சொல்லிட்டான். அப்பறம் டிரை பண்ணி பார்த்தான். உடனே அவங்க என்ன கூப்பிட்டு 'உங்க பையன் நல்லா நடிக்கிறான் வாங்க" அப்படினு சொன்னாங்க. 

சரினு நானும் போய் அங்க உக்காந்தா உடனே 'நீ வெளிய போயிடுனு' என் பையன் சொல்லிட்டான். நீ இங்க இருந்தா எனக்கு கம்ஃபர்டபிளா இல்லனு சொன்னான். அப்படி தான் அவன் உள்ள வந்தது" என்று தெரிவித்துள்ளார்.