என் புருஷன் 10 வருஷமா அதுக்காக தவிச்சுருக்காரு - ஓப்பனாக சொன்ன பாவனா!

Bhavana Tamil Cinema Tamil TV Shows Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 09, 2024 04:24 PM GMT
Report

தனது கணவர் குறித்து தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

பாவனா பாலகிருஷ்ணன்

ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கிய பாவனா பாலகிருஷ்ணன், ராஜ் டிவியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

என் புருஷன் 10 வருஷமா அதுக்காக தவிச்சுருக்காரு - ஓப்பனாக சொன்ன பாவனா! | Anchor Bhavana Balakrishnan About Her Husband

பின்னர் விஜய் டிவியில் முழு நேர தொகுப்பாளினியாக பணியாற்றினார். அந்த சேனலில் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

பாவனா கடந்த 2011-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆனார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றும் கலந்து கொண்ட அவர், தனது கணவர் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "இந்த 10 வருஷத்துல என்கூட ஒரு விடுமுறையை பிளான் பண்றதுக்கு எனது கணவர் அவ்வளவு தவிச்சுருக்காரு.

என் பையன் வெளிய போக சொல்லிட்டான்; நா அங்க இருந்தா.. விஜய் சேதுபதி ஓபன் டாக்!

என் பையன் வெளிய போக சொல்லிட்டான்; நா அங்க இருந்தா.. விஜய் சேதுபதி ஓபன் டாக்!

ஜாலியா போயிருவாரு

அவரோட நண்பர்கள், அவர் கூட வேலை செய்யும் நபர்களை பார்க்க போனும்னாலும் என்னுடைய இருப்பை கடைசிவர அவரால உறுதியாக சொல்ல முடியாது. அடுத்த மாசம் என்ன பண்ண போறீங்க அப்படினு கேப்பாரு.

என் புருஷன் 10 வருஷமா அதுக்காக தவிச்சுருக்காரு - ஓப்பனாக சொன்ன பாவனா! | Anchor Bhavana Balakrishnan About Her Husband

அவங்களோட தொழில் வாழ்க்கையில் எல்லாத்தையும் கேலண்டரில் நோட் பண்ணி வச்சுக்குவாங்க. அடுத்த மாசம் 20-ம் தேதி நம்ம எல்லாரும் மீட் பண்ணனும்னு நோட் பண்ணி வச்சுக்குவாங்க. ஆனா.. நமக்கு ஆடிக்கும், அமாவாசைக்கும் ஒரு தடவ தான் வேலை வருது. பெரிய வேலை வரும் போது நம்மால அத ஒதுக்கியும் வைக்க முடியாது.

இந்த உலகத்துல அவ்வளவு வேறுபாடு இருக்குறத அவர் புரிஞ்சுக்கிட்டதால தான் ஏத்துக்குறாரு. இயல்பா எடுத்துக்குறாரு. சில நேரத்துல கோவம் வரத்தான் செய்யும். போடி அப்படினு சொல்லிட்டு ஜாலியா போயிருவாரு" என்று தெரிவித்துள்ளார்.