முடங்கிய தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி - காரணம் என்ன தெரியுமா?

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Jiyath Mar 09, 2024 05:55 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது. 

சிறப்பு செயலி 

நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். இதனைத் தொடர்ந்து கட்சிக்காக பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முடங்கிய தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி - காரணம் என்ன தெரியுமா? | Vijay S Tvk Membership App Is Down

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி ஒன்றை நேற்று அறிமுகம் செய்தார். முதல் உறுப்பினராக அக்கட்சியின் தலைவர் விஜய் சேர்ந்தார்.

கேரள மாநில பள்ளியில் 'ஏஐ' ஆசிரியை - மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து அசத்தல்!

கேரள மாநில பள்ளியில் 'ஏஐ' ஆசிரியை - மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து அசத்தல்!

முடங்கியது

இதுதொடர்பான வீடியோவும் நேற்று வெளியிடப்பட்டது. அதில், வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைப்பேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் என்றும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம் என்றும் தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்தார்.

முடங்கிய தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி - காரணம் என்ன தெரியுமா? | Vijay S Tvk Membership App Is Down

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது. வாட்ஸ் அப், டெலிகிராம், செயலி என அனைத்து தளங்களும் முடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால் செயலி முடங்கியுள்ளது.