கேரள மாநில பள்ளியில் 'ஏஐ' ஆசிரியை - மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து அசத்தல்!

Kerala India Artificial Intelligence
By Jiyath Mar 08, 2024 10:26 AM GMT
Report

ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஏஐ ஆசிரியை

கேரள மாநிலம் கொல்லம்பலத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐரிஸ் என பெயரிடப்பட்டுள்ள எஐ ஆசிரியை பெண் போல சேலை மற்றும் அணிகலன்களை அணிந்துள்ளது.

கேரள மாநில பள்ளியில்

ஐரிஸ் கழுத்தில் உள்ள நெக்லஸில் மைக்ரோமோன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 4 சக்கரம் கொண்டு வடிவமைக்கப்பட்டள்ளது. அதனால் இரண்டு வழிகளிலும் தலையை திருப்பவும், கைகளையும் அசைக்க முடியும். அதேபோல 3 மொழிகளை கையாளும் திறன் கொண்ட ஐரிஸ் மாணவர்கள் கேட்டுக்கொண்டால் கைக்கொடுக்கும்.

அனைத்து துறைகளை சார்ந்த பாடத்திலும் வல்லுநராக இருக்கும் ஐரிஸ் குழந்தைகளுக்கு கதைகளும் சொல்லும். அந்த பள்ளியில் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு ஐரிஸ் உடனுக்குடன் பதிலளித்தது. ஐரிஸ் ஆசிரியை பணியை தொடங்கியதும் நெட்வொர்க் குறைபாடு மற்றும் மாணவர்களின் கூச்சல் காரணமாக பதில் அளிக்க சற்று நேரம் எடுத்தது.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் - ஆதித்யா எல்-1 ஏவப்பட்ட நாளில் அதிர்ச்சி!

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் - ஆதித்யா எல்-1 ஏவப்பட்ட நாளில் அதிர்ச்சி!

குழந்தைகள் உற்சாகம் 

இதனையடுத்து அமைதியை கடைபிடித்து ஒவ்வொருவராக கேள்வி கேட்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளையும் கேட்டனர்.

கேரள மாநில பள்ளியில்

அதற்கெல்லாம் சளைக்காமல் ஐரிஸ் பதில் அளித்தது. இதனால் பள்ளி குழந்தைகள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். குறிப்பாக இந்த எஐ ஆசிரியையை எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. குழந்தைகள் விரும்புகிறார்கள். இதுகுறித்து அந்த பள்ளியின் முதல்வர் மீரா சுரேஷ் கூறுகையில் "ஐரிஸ் ஒருபோதும் கோபப்படுத்தாது. குழந்தைகளை எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்ளாது.

எப்போதும் அவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும். ஐரிஸ் கேள்விகள் கேட்காது. வீட்டுப்பாடமும் கொடுக்காது. ஆனால் இது ஒருபோதும் ஆசிரியைகளுக்கு மாற்றாக இருக்காது. ஏனென்றால் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது. அக்கறை எடுத்துக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.