இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் - ஆதித்யா எல்-1 ஏவப்பட்ட நாளில் அதிர்ச்சி!
புற்றுநோயில் இருந்து மீண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
எஸ்.சோம்நாத்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) தற்போதைய தலைவராக இருப்பவர் எஸ்.சோம்நாத். இவர் கேரளா மாநிலம் சேர்த்தலாவை சேர்ந்தவர் ஆவார்.
சோம்நாத்தின் தற்போதைய பதவிக் காலத்தில் நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தது. இதனையடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 திட்டமும் வெற்றியடைந்தது.
இந்நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக சோம்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர் "சந்திரயான் 3 விளக்கலாம் விண்ணில் செலுத்திய அன்று புற்றுநோய்க்கான சில அறிகுறிகள் இருந்தது.
புற்றுநோய் பாதிப்பு
அப்போது அதுகுறித்த சரியாக எதுவும் தெரியவில்லை. பின்னர் மருத்துவ பரிசோதனை செய்தேன். ஆத்தியா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவிய அன்று இரைப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த செய்தி எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மட்டுமின்றி சகா பணியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது" என்றார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி 4 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.
தற்போது புற்றுநோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்து பணியை தொடர்வதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவதாகவும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.