செயற்குழு கூட்டம்: விமர்சனங்கள் வந்தால் இதை செய்யுங்கள்..! - தவெக தலைவர் விஜய் அறிவுரை!
விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவுரை வழங்கினார்.
செயற்குழு கூட்டம்
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ள நடிகர் விஜய், அரசியலில் வேகம் காட்ட துவங்கியுள்ளார். 'தமிழக வெற்றி கழகம்' அறிவிப்பு வெளியானது முதல், கட்சி பணிகள் ஆங்காங்கே நடைபெற துவங்கிவிட்டன.

அந்த வகையில் 'தமிழக வெற்றி கழகத்தின்' முதல் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் 'விஜய்' காணொளி வாயிலாகி கலந்து கொண்டார்.
விஜய் அறிவுரை
அப்போது பேசிய அவர், இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள் என்று செயற்குழு உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், குக்கிராமங்களிலும் கட்சியை பற்றி தெரியப்படுத்த வேண்டும் என்றும் 2024 தேர்தலுக்கு பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil