அஜித் அப்படி சொல்வார்னு எதிர்பார்க்கவே இல்ல - விஜய் தாய் எமோஷனல்!
விஜய்யின் தாய் ஷோபா அஜித் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
ஷோபா சந்திரசேகர்
விஜய் தற்போது தான் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து விஜய் தன் கடைசி திரைப்படமான தளபதி 69 பட வேலைகள் தொடங்கவுள்ளது.
எச்.வினோத் இப்படத்தை இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது. அதன்பின், விஜய் முழுநேரமாக அரசியலில் களமிறங்கவுள்ளார். சமீபத்தில் தான் விஜய் தன் தாய் தந்தையை சந்தித்தார்.
அஜித் சொன்னது
அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில், குஷி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அஜித் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.
அப்போது மேடையேறிய அஜித், விஜய்யுடன் நான் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தேன். அப்போது விஜய் வீட்டில் இருந்து எனக்கும் சேர்த்து உணவு வரும். ஷோபா அம்மாவின் கையால் நான் சாப்பிட்டு இருக்கின்றேன்.
அதை என்னால் மறக்கவே முடியாது என்றார். இவர் இப்படி பேசுவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.