அந்த படத்துல வாய்ப்பு கேட்டேன் விஜய் கொடுக்கல - தாய் ஷோபா ஆதங்கம்!

Vijay Shoba
By Sumathi Nov 08, 2023 09:56 AM GMT
Report

விஜய்யுடன் நடிக்க அவரிடம் வாய்ப்பு கேட்டதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரது மனைவி சங்கீதார். இவர்களுக்கு 1 மகளும் 1 மகனும் உள்ளனர்.

vijay with his mother

திடீரென, அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் கருத்து வேறுபாட்டால் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்ற செய்திகள் பரவியது. அதற்கிடையில், கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த விஜய் நீலாங்கரை பகுதியில் பங்களா கட்டி குடியேறினார்.

விஜய் எப்போ அரசியலுக்கு வருகிறார் - ஷோபா சந்திரசேகர் பளீச்!

விஜய் எப்போ அரசியலுக்கு வருகிறார் - ஷோபா சந்திரசேகர் பளீச்!

தாய் ஆதங்கம் 

தற்போது, அவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் அவருடன் இல்லை. அவர்கள் லண்டனில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், அவரது தாய் ஷோபா சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் நடிக்கும் படங்களில் அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், விஜய் அந்த வாய்ப்பை கொடுப்பதே இல்லை.

shoba chandrasekar

வாரிசு படத்தில் கூட நான் அம்மாவாக நடிக்கிறேன் என கேட்டேன். உங்களை பார்த்தவுடனே நான் சிரித்துவிடுவேன்’ அப்புறம் எப்படி நடிப்பது என சொல்லி வாய்ப்புகொடுக்கவில்லை. விஜய் மிகவும் பாசமானவர்தான். சமீபத்தில் எங்களின் 50வது திருமண நாளை கொண்டாடினோம்.

அவருக்கு போன் செய்து நீ கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டும் என அழைத்தேன். அடுத்த 10வது நிமிடத்தில் என் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரைப்பற்றி தவறான தகவல்களை பலரும் பரப்பி வருகிறார்கள். அதில் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளார்.