தற்கொலை செய்த ஷோபா; சடலத்தை கூட பார்க்கமுடியல - புலம்பிய பிரபல நடிகை!
ஷோபாவில் முகத்தை கடைசி வரை பார்க்க முடியவில்லை என நடிகை பார்வதி வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகை பார்வதி
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை எஸ்.என் பார்வதி. தற்போது சீரியல்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில் நடிகை ஷோபாவுடனான உறவு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், ஷோபா எனக்கு மகள் போன்றவள் தான். நான் தான் அவளுக்கு உணவு கூட ஊட்டி விடுவேன். அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்தது. ஒருநாள் நான் ஏதோ ஒரு படபிடிப்புக்கு சூட்டிங் சென்றிருந்தேன்.
வேதனை
அப்போ ஷோபா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி எனக்கு வந்தது. ஆனால் அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காரணத்தால் என்னால் அந்த இறப்பிற்கு கூட செல்ல முடியவில்லை.
கடைசி வரை அவருடைய முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஷோபா என்னிடம் மட்டுமல்லாமல் எல்லாரிடமும் அன்பாகத்தான் இருப்பார். ஆனால் எதற்காக அவள் இப்படி ஒரு முடிவை எடுத்தாள் என்பது எனக்கு வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.