மருமகளுடன் ரீல்ஸ் செய்த நடிகர் விஜய்யின் தாய் - வைரலாகும் வீடியோ இதோ..
தனது மருமகளுடன் ஷோபா சந்திரசேகர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
ஷோபா சந்திரசேகர்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 1 மகளும் 1 மகனும் உள்ளனர். விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர்.

இவர் தனது கணவர் எஸ்.ஏ. சந்திரசேகருடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு தனது அண்ணன் எஸ்.என். சுரேந்தரின் மகள் பல்லவி கணவர் வினோத் குமாருடன் செட்டிலாகியுள்ளார்.

வைரல் வீடியோ
தற்போது அங்குதான் ஷோபா சந்திரசேகர் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். அப்போது இருவரும் ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோவை பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அது தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, ஷோபா சந்திரசேகர் செய்த 'So Beautiful So Elegant Just Looking Like A Wow' ரீல்ஸ் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan