அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பு வீச்சா..? தாக்கப்பட்டாரா தளபதி - வைரலாகும் வீடியோ.!!

Vijay Vijayakanth
By Karthick Dec 29, 2023 04:30 AM GMT
Report

நேற்றிரவு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த போது நடிகர் விஜய் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாகி வருகின்றது.

விஜய் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நடிகர் விஜய் நேற்றிரவு தனது கடைசி அஞ்சலியை செலுத்தினார். பெரும் கூட்டத்திற்கு மத்தியில் கவலை தோய்ந்த முகத்துடன் வந்த விஜய், மாலை அணிவித்து விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

does-vijay-got-attacked-in-vijayakanth-funeral

விஜயின் ஆரம்பகாலகட்டத்தில் அவருக்கு பெரும் உதவியை செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் செய்தவர் விஜயகாந்த். அந்த படம் தான் விஜயை அநேக மக்களிடம் கொண்டு சென்றதாகவும் இன்றளவும் கூறப்படுகிறது.

தாக்கப்பட்டாரா..?

நேற்று விஜய் அஞ்சலி செலுத்திய வீடியோ வெளியானது. அப்போது எங்கிருந்தோ செருப்பு ஒன்று வந்து விஜய்யை தாக்குவது போல் வீடியோ ஒன்று வைரலானது. மேலும் கூட்டத்தில் உள்ள சிலர் விஜய்யை தாக்கியதாகவும் பேசப்படுகிறது.

does-vijay-got-attacked-in-vijayakanth-funeral

ஆனால், இது எதுவுமே உண்மையில்லை. அங்கிருந்த விஜயகாந்தின் தொண்டர்கள் அனைவருமே விஜய்யை தளபதி என்று பாசத்துடன் அழைத்தனர். மேலும் நடிகர் விஜய்யை செருப்பால் தாக்கியது போல் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. அது உண்மையான வீடியோ இல்லை.